ஹரி பிரகாஷ் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படமான ‘பீல் மை லவ்’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.
‘96’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் ஆதித்யா பாஸ்கர் மற்றும் ‘அசுரன்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை அம்மு அபிராமி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘பீல் மை லவ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஹரி பிரகாஷ் இயக்குகிறார்.
காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஐரா, ராஜய்யப்பா, நோப்லக் ஜேம்ஸ், பிரியங்கா, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு எம்.எஸ். சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜரவிவர்மா மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோர் இசையமைக்கின்றனர்.
‘பீல் மை லவ்’ படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியானது. ஹரி பிரகாஷ் இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.
ஹரி பிரகாஷ் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படமான ‘பீல் மை லவ்’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.
இன்றைய தலைமுறையினரின் காதல் எல்லைகள், உணர்வுகளின் ஆழம், வாழ்க்கை மதிப்பீடுகள் மற்றும் யாரும் எதிர்பார்க்காத ஒரு சுவாரஸ்யமான திருப்பத்தை மையமாகக் கொண்டு, ஒரு புத்துணர்ச்சியூட்டும் ரொமான்டிக் காமெடித் திரைப்படமாக ‘பீல் மை லவ்’ உருவாகியுள்ளது. இளமைத் துள்ளல், காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த காட்சிகளுடன் இந்த டீசர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஆதித்யா மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தின் பாடல்கள், டிரெய்லர் மற்றும் திரையரங்க வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.