பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான். 61 வயதான அமீர் கான் ஏற்கனவே 2 திருமணங்கள் செய்திருந்தார். எனினும், மனக்கசப்பு காரணமாக 2 மனைவிகளிடம் இருந்தும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் சமீபத்தில் அமீர் கான் , கவுரி ஸ்ப்ராட் என்பவர் மீது காதல் வயப்பட்டார். இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்த நிலையில், வரும் ஜூலை 5ம் தேதி தனது காதலியை அமீர் கான் திருமணம் செய்ய உள்ளார்.
கவுரி ஸ்ப்ராட்டின் வயது 47. இவர்கள் 2 பேரும் சில நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்றபோது இதுபற்றிய கிசுகிசுக்கள் பரவின. இந்நிலையில் தற்போது அது உறுதியாகி உள்ளது. இவர்களின் திருமணம் எளிய முறையில் பதிவு திருமணமாக நடைபெற உள்ளது. மிகவும் நெருக்கமான குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற உள்ளனர். அமீர்கானின் சினிமா நண்பர்களான சல்மான்கான், ஷாருக்கான் உள்பட இன்னும் சில சினிமா பிரபலங்கள் திருமண விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கவுரி ஸ்ப்ராட் பெங்களூருவை சேர்ந்தவர். லண்டனில் பேஷன் மற்றும் ஸ்டைலிங் படிப்பை முடித்துள்ள அவர், தற்போது மும்பையில் சலூன் ஒன்றை நடத்தி வருவதுடன், அமீர் கானின் தயாரிப்பு நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏழு வயதில் ஒரு குழந்தை உள்ளது.