சினிமா செய்திகள்

அமீர் கானின் “ஹேப்பி படேல்” டிரெய்லர் வெளியானது

வீர் தாஸ், அமீர்கான் நடித்துள்ள ‘ஹேப்பி படேல்’ படம் வரும் ஜனவரி 16 ம் தேதி வெளியாகிறது.

அமீர் கான் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வீர் தாஸ், ஹேப்பி படேல் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். வீர் தாஸ் இந்தியில் டெல்லி பெல்லி படத்தை இயக்கியிருந்தார். இப்படம் தமிழில் சேட்டை படமாக ரிமேக்கானது.

வீர் தாஸுடன், மோனா சிங், மிதிலா பால்கர் மற்றும் ஷரிப் ஹாஷ்மி ஆகியோர் ஹேப்பி படேல் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இதில் டெல்லி பெல்லி படத்தில் நடித்த நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். இப்படத்தில் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

 இந்நிலையில் ஹேப்பி படேல் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படம் வரும் ஜனவரி 16 ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.