சினிமா செய்திகள்

மராத்தியில் அறிமுகமாகும் அபிஷேக் பச்சன்

ரித்தேஷ் தேஷ்முக் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடிக்கும் ‘ராஜா சிவாஜி’ திரைப்படம் மே 1ம் தேதி வெளியாகிறது.

சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ராஜா சிவாஜி’ திரைப்படம் மூலம் முதன்முறையாக மராத்தி திரையுலகில் தடம் பதிக்கிறார் நடிகர் அபிஷேக் பச்சன். இந்த படத்தில் சாம்ராஜ் சாகாஜி போஸ்லே என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். ஜியோ ஸ்டுடியோஸ், மும்பை பிலிம் கம்பெனி இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. மராத்தி, இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ‘ராஜா சிவாஜி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகியுள்ளது. இதில் அபிஷேக் ஒரு போர்வீரரின் உடையை அணிந்துகொண்டு, போர்க்களத்தில் கர்ஜித்தபடியும், சத்ரபதி சிவாஜி மகாராஜாவுடன் தோன்றுகிறார்.

படத்தின் விழாவில் அபிஷேக் பச்சன், “இதுவே எனது முதல் மராத்தி படம். நான் ரித்தேஷை, சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு லாத்தூரில் நான் அவரை முதன்முதலில் சந்தித்தபோது சத்ரபதி சிவாஜி மகாராஜாவை பற்றி ஒரு திரைப்படத்தை இயக்கி உருவாக்க வேண்டும் என்ற தனது கனவை என்னிடம் பகிர்திருந்தார். ரித்தேஷ்க்குடன் இணைந்து நான் பல படங்களில் பணியாற்றியுள்ளேன்” என்றார்.