சினிமா செய்திகள்

“எப் 1” ரீமேக்கில் நடிக்க தகுதியானவர் நடிகர் அஜித் - நரேன் கார்த்திகேயன்

பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், அஜித் கார் பந்தயம் தொடர்பான படங்களில் நடிக்க மிகவும் பொருத்தமானவர் என்று கூறியுள்ளார்.

தமிழ் திரைத்துறையில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் அஜித், இவருக்கென தமிழகம் மட்டுமல்ல பல நாடுகளில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார், மற்றும் இது ஒரு ஜாலியான கேங்க்ஸ்டர் கதையாக அமைந்துள்ளது, இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தற்போது வரை எந்தவித படத்தையும் ஒப்புகொள்ளலாம் கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு நாடுகளில் நடைபெறும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு சாதித்தும் வருகிறார்.

விளையாட்டை மையப்படுத்திய படங்களின் திரைப்பட விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியாவில் இருந்து எப்1 ரேஸில் பங்கேற்ற நரேன் கார்த்திகேயன் கலந்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். 

அப்போது உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற எப் 1 ஹாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு நரேன் கார்த்திகேயன், கண்டிப்பாக அஜித் தான். அதற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார். 50 வயதிலும் நிறையப் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்த வயதிலும் கார் ரேஸ் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அவரும் நானும் 25 ஆண்டுகால நண்பர்கள். இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸை பிரபலப்படுத்தி வருகிறார். தற்போது அவருடன் இணைந்து நானும் பயணிக்கிறேன். இருவரும் இணைந்து வெற்றிக்கு வித்திட்டு வருகிறோம் என்று பதிலளித்துள்ளார் நரேன் கார்த்திகேயன்.

View this post on Instagram

SCROLL FOR NEXT