துபாயில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள நடிகர் அஜித் குமார் அங்கு சில மாதங்களாக தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். பயிற்சிகளின்போது அன்றாடம் அவரைச் சந்திக்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சென்று புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்ததுடன் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
துபாயில் போர் பதற்றம் காரணமாக, அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் கவலையடைந்த நிலையில், அஜித்குமார் பாதுகாப்பான இடத்தில் நலமாக உள்ளதாக சமீபத்தில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். சமீபத்தில் துபாயிலிருந்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அஜித்தை பார்த்த ரசிகர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கினர்.
அஜித் சென்னை திரும்பிய நிலையில், அஜித் குமாருக்கு உலகின் முதல் Formula E Themed SUV காரை மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் ஆர்.வேலுசாமி பரிசாக வழங்கியுள்ளார். நடிகரும் கார் ரேசருமான அஜித் குமாரின் ரேசிங் மீதான ஆர்வத்தை பாராட்டும் வகையில், மஹிந்திரா BE FORMULA E EDITION கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.