சினிமா செய்திகள்

கார் பந்தயத்தின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நடிகர் அஜித்

லண்டனில் அஜித் பங்கேற்கும் சில்வர்ஸ்டோன் கார் பந்தய போட்டியை முதல்-அமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

நடிகர் அஜித் குமார் சர்வதேச கார் பந்தயமான மிச்செலின் லீமென்ஸ் கோப்பையின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

சில்வர்ஸ்டோனில் இன்று (சனிக்கிழமை) இரவு தொடங்கவுள்ள ‘மிச் செலின் லீ மென்ஸ்’ கார் பந்தயத்தை முதல்-அமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பை மிச்செலின் லீ மென்ஸ் போட்டிக்கான நிர்வாக குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போட்டி தொடரில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தனது அணி சார்பில் கலந்து கொள்கிறார்.

முன்னதாக, தமிழ்நாடு சட்டசபையின் 110 விதியின் கீழ், அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி மற்றும் ஒலிம்பிக் நகரம் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கார் பந்தயத்தில்தான் நடிகர் அஜித்குமார் தனது குழுவினருடன் பங்கேற்கிறார். அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை விஜய் தொடங்கி வைக்க இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக லண்டனில் தங்கியிருந்து தனது குழுவினருடன் அஜித் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நடிகர் அஜித்

இந்நிலையில், நடிகர் அஜித் குமார் சர்வதேச கார் பந்தயமான மிச்செலின் லீமென்ஸ் கோப்பையின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இந்தத் தொடரில் அஜித்துடன் இணைந்து இந்தியாவின் முன்னணி பார்முலா 1 பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா படேல் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

SCROLL FOR NEXT