சினிமா செய்திகள்

ரஜினியின் “ஜெயிலர் 2” படத்தை பாராட்டிய நடிகர் அல்லு அர்ஜுன்

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் ரூ.550 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை பாராட்டி நடிகர் அல்லு அர்ஜுன் பதிவிட்டுள்ளார்.

‘ஜெயிலர் 2’

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கடந்த 15ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நட்சத்திர பட்டாளம்

முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், யோகிபாபு உள்ளிட்டோர் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, ஹிருத்திக் ரோஷன், மிதுன் சக்கரவர்த்தி, விஜய் சேதுபதி, நமோ நாராயணா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் முதல் பாதியில் நமோ நாராயணா, யோகிபாபு உள்ளிட்டோரின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களைக் கவர்வதாகக் கூறப்படுகிறது. இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனிருத்தின் பின்னணி இசையும் படத்துக்கு வலுசேர்ப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“ஜெயிலர் 2” படத்தை பாராட்டிய அல்லு அர்ஜுன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். படம் பாக்ஸ் ஆபீஸில் மிக வேகமாக ரூ. 500 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ஜெயிலர் 2 திரைப்படம் ஒரு அக்னிப் பிழம்பு. ரஜினி சாரின் ஸ்டார் பவர், ஸ்வாக் மற்றும் அவரது ஆளுமைக்கு சான்றாக இப்படம் அமைந்துள்ளது. சட்டை கூட கலையாமல் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்வது ரஜினி சாரால் மட்டுமே சாத்தியம். நெல்சன் திலீப்குமார் மீண்டும் ஒரு மாஸான, அதிரடியான வெற்றியைத் தந்துள்ளார். அனிருத் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் ” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT