தேனி,
தேனி சங்கராபுரம் கோவிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம் செய்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் செயல்பட்டு வரும் தனுஷ், தற்போது ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம்’ திரைப்படத்தில் ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் தேனி சங்கராபுரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த தனுஷை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் அங்கு கூடினர். தனுஷ் சாமி தரிசனம் செய்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகர் தனுஷ் எதிர்காலத்தில் அரசியலுக்கு வர இருப்பதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், தேனி சங்கராபுரம் கோவிலில் தனுஷ் சாமி தரிசனம் செய்தது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.