ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகி நங்லல வரவெற்பை பெற்ற படம் ஆவேஷம். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பஹத்தின் நடிப்பால் வெற்றிப்படமானது. பெங்களூருவைச் சேர்ந்த கேங்க்ஸ்டரான ரங்கனைச் (பகத்) சந்திக்கும் மூன்று கல்லூரி மாணவர்கள், அவரால் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.
இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சஜின் கோபு, மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சுஷின் ஷியாம் இசையமைத்திருந்தார். இப்படம் கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழக ரசிகர்களாகும் கொண்டாடப்பட்டது. ரூ.125 கோடிக்கும் அதிகமாக வசூல செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தினை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில், ஆவேஷம் படத்தின் 2 பாகம் 2027 அல்லது 2028 ஆம் ஆண்டில் உருவாகும் என்று பகத் பாசில் தெரிவித்துள்ளார். தற்போது ஆவேஷம் இயக்குநர் ஜீத்து மாதவன் சூர்யா47 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தி முடித்துவிட்டு ஆவேஷம் 2 படத்தின் பணிகளில் ஈடுபடுவார் என்று தெரிகிறது.