சென்னை,
நடிகர் ஹரிஷ் கல்யாண், கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். பின்னர் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்ட்கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.அதனைத் தொடர்ந்து ‘பியார் பிரேமா காதல், இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும், தாராளபிரபு, பார்க்கிங், லப்பர் பந்து, டீசல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகராக உருவெடுத்தார்.
இவர் கடைசியாக வெளியான ‘டீசல்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது இவர் வினீத் வரபிரசாத் இயக்கும் ‘தாஷமக்கான்’ படத்தில் நடித்து வருகிறார். ‘நூறு கோடி வானவில்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இவர் 2022ம் ஆண்டு நர்மதா உதயகுமாரை திருமணம் செய்து கொண்டார். கடந்த மார்ச் 2ம் தேதி ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், தமிழ் வருடப்பிறப்பான இன்று நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது மகளுக்கு ‘கிரியா ஹரிஷ்’ என்று பெயர் சூட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.