சென்னை,
கோலிவுட்டில் முன்னணி நடிகராக திகழும் கார்த்தி, பல்வேறு வகை கதைகளில் நடித்துவரும் திறமையான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். காதல், கமர்ஷியல், ஆக்சன் மற்றும் வரலாற்று படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘வா வாத்தியார்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது, கார்த்தி ‘சர்தார்-2’, ‘மார்ஷல்’, ‘கைதி-2’ உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே, தெலுங்கில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெற்றி பெற்ற ‘அகண்டா’ படத்தின் இயக்குனர் பொயபட்டி ஸ்ரீனி, கார்த்திக்கு புதிய கதையை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் கார்த்தி அடுத்ததாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.