சினிமா செய்திகள்

“மொத ராத்திரி” படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் கார்த்தி

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா நடித்த ‘மொத ராத்திரி’ திரைப்படம் மக்கள் வரவேற்பை பெற்றது.

‘மொத ராத்திரி’ பட இயக்குநர் ராஜா கருப்பசாமி மற்றும் படக்குழுவை நேரில் அழைத்து நடிகர் கார்த்தி பாராட்டியுள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படம் இதுவாகும். ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். ‘மொத ராத்திரி’ படம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

காதல், நகைச்சுவை கலந்த கதை

புதிதாகத் திருமணமான ஒரு ஜோடியின் வாழ்க்கையில் நடைபெறும் காதல் மற்றும் நகைச்சுவை சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ‘மொத ராத்திரி’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

ரூ.8 கோடி வசூல்

ரூ 5 கோடி பட்ஜெட்டில் வெளியான ‘மொத ராத்திரி’ படம் 2 வாரத்தில் ரூ.8 கோடி வசூலித்தது.

இயக்குநரை நேரில் பாராட்டிய கார்த்தி

இந்த நிலையில், இயக்குநர் ராஜா கருப்பசாமி மற்றும் படக்குழுவை நடிகர் கார்த்தி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

‘மொத ராத்திரி’ படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

SCROLL FOR NEXT