சினிமா செய்திகள்

80ஸ் ட்ரெண்டில் இணைந்த நடிகர் லெஜண்ட் சரவணன்

இன்ஸ்டாகிராம் செயலியில் தற்போது 80ஸ் லுக் ஏஐ போட்டோஸ் செம ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது.

நடிகர், நடிகைகளும் தங்களின் போட்டோக்களை ஏஐ மூலம் 80ஸ் லுக்கிற்கு மாற்றி இன்ஸ்டா ட்ரெண்டிங்கில் இணைந்துள்ளனர்.

சினிமாவில் மட்டுமின்றி நம் கையில் உள்ள ஸ்மார்ட் போன் வரை ஏஐ ஆதிக்கம் வந்துவிட்டது. ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்றாலும் ஏஐ-தான், தனக்கு பிடித்தவாறு உருக்க வேண்டும் என நினைத்தாலும் எஐ-தான் உதவுகிறது. ஒருபுறம் இதனை நல்வழியில் பயன்படுத்தினாலும், மறுபுறம் சிலர் இதனை வைத்து திரை பிரபலங்களை தவறாக சித்தரித்து ஏஐ வீடியோ மற்றும் புகைப்படங்களை உருவாக்குகின்றனர். இது பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இன்ஸ்டாகிராம் செயலியில் தற்போது 80ஸ் லுக் ஏஐ போட்டோஸ் செம ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது.

இன்ஸ்டாகிராமில் புதிய 80-ஸ் போட்டோ டிரெண்ட் வைரலாகி வருகிறது. இதில், பயனர்கள் சாட்ஜிபிடி போன்ற ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி தங்களின் தற்போதைய புகைப்படங்களை 1980-களின் விண்டேஜ் தோற்றம் கொண்ட படங்களாக மாற்றி வருகின்றனர். பழைய கால உடைகள், ஹேர் ஸ்டைல், நிறங்கள் மற்றும் கேமரா எஃபெக்ட்களுடன் உருவாகும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. நீங்களும் இதுபோன்ற புகைப்படங்களை எளிதாக உருவாக்கலாம்.

சாட்ஜிபிடி 80-ஸ் போட்டோ டிரெண்ட்

சாட்ஜிபிடி 80-ஸ் போட்டோ டிரெண்ட் என்பது வெறும் பில்டர் மாற்றம் மட்டுமல்ல. ஏஐ தொழில்நுட்பம் மூலம் புகைப்படத்தில் உள்ள ஹேர்ஸ்டைல், உடை, மேக்கப், பின்னணி, ஒளியமைப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் மாற்றப்படுகின்றன. இதன் மூலம் 1980-களின் பேஷன் மற்றும் கேமரா தோற்றத்துடன் தத்ரூபமான விண்டேஜ் புகைப்படத்தை உருவாக்க முடியும். பழைய கால நினைவுகளை மீண்டும் உருவாக்கும் வகையில் இந்த டிரெண்ட் தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.

உங்கள் 80-ஸ் போட்டோவை நீங்களே உருவாக்குவது எப்படி?

உங்கள் 80-ஸ் போட்டோவை நீங்களே எளிதாக உருவாக்கலாம். முதலில் சாட்ஜிபிடியில் உங்களின் புகைப்படத்தை அப்லோட் செய்யுங்கள். பின்னர் 1980-களின் உடை, ஹேர்ஸ்டைல், மேக்கப், பின்னணி, கேமரா எபெக்ட் உள்ளிட்ட விவரங்களை தெளிவாகக் குறிப்பிடுங்கள். நீங்கள் விரும்பும் ரெட்ரோ ஸ்டைலையும் சொல்லலாம். அதற்கேற்ப ஏஐ உங்கள் புகைப்படத்தை விண்டேஜ் தோற்றத்தில் மாற்றி உருவாக்கும். பின்னர் தேவைக்கேற்ப மாற்றங்களைச் சொல்லி, படத்தை மேலும் தத்ரூபமாகவும் அழகாகவும் உருவாக்கிக் கொள்ளலாம்.

பாலிவுட் ஸ்டைல் முதல் குடும்ப ஆல்பம் வரை

பாலிவுட் ஸ்டைல் முதல் குடும்ப ஆல்பம் வரை, உங்கள் 80-ஸ் போட்டோவை விருப்பத்திற்கேற்ப கஸ்டமைஸ் செய்யலாம். ரெட்ரோ திருமணம், டிஸ்கோ பார்ட்டி, பழைய குடும்ப புகைப்படம், விண்டேஜ் ஸ்டுடியோ என பல்வேறு பின்னணிகளைத் தேர்வு செய்யலாம். உடை, ஹேர்ஸ்டைல், மேக்கப் உள்ளிட்டவற்றையும் மாற்றி அமைக்க முடியும். குறிப்பாக இந்திய 80-ஸ் காலத்து கலாச்சாரம் மற்றும் ஃபேஷனை பிரதிபலிக்கும் வகையில் தத்ரூபமான புகைப்படங்களையும் உருவாக்கலாம்.

பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் ஏஐ

1980-களின் காலத்தை நினைவுபடுத்தும் புகைப்படங்களை உருவாக்க தற்போது சிக்கலான போட்டோ எடிட்டிங் மென்பொருட்கள் தேவையில்லை. ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன், உங்களின் தற்போதைய புகைப்படத்தை சில எளிய வழிமுறைகளில் விண்டேஜ் தோற்றத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். பழைய கால உடைகள், ஹேர்ஸ்டைல், மேக்கப், பின்னணி, கேமரா தரம், நிறங்கள் உள்ளிட்டவற்றையும் ஏஐ மூலம் மாற்ற முடியும்.

80ஸ் ஏஐ போட்டோ ட்ரெண்டில் இணைந்த லெஜண்ட் சரவணன்

நடிகர் லெஜண்ட் சரவணன், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ‘80ஸ் ஏஐ போட்டோ ட்ரெண்டில்’ இணைந்து தனது ரெட்ரோ தோற்றப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் 1980-களின் சினிமா பத்திரிகை மற்றும் ஸ்டுடியோ பின்னணியில், விண்டேஜ் உடைகள் மற்றும் சிகை அலங்காரத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று வருகின்றன

இந்த நிலையில், திரை பிரபலங்கள் கடந்த சில நாட்களாக ஏஐ பிராம்ட் பயன்படுத்தி 80ஸ்-களின் காலகட்டத்திற்கே சென்றுவிட்டனர். 80-ஸில் நாம் எப்படி இருந்திருப்போம் என சாட்ஜிபிடிமற்றும் கூகுள் ஜெமினிபோன்ற ஏஐ தளங்களை பயன்படுத்தி அந்த புகைப்படங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தையும் ஈர்த்துள்ளன.

SCROLL FOR NEXT