ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரவி மோகன், எம் குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன் போன்ற பல வெற்றி படங்கள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தை திரைத்துறையில் பிடித்துள்ளார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். அதில், முதல் படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் புரோ கோட் அவரே நடித்து வருகிறார். ரவி மோகன் இயக்கும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தில் யோகி பாபு நாயகனாக நடித்துவருகிறார். கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சட்டமன்ற தேர்தல் நடைபெறும் இந்த சமயத்தில் நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிசா இருவரும் திருப்பதி சென்றுள்ளனர். திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன், அனைவருக்காகவும் வேண்டிக்கொண்டதாகவும், “ஹேப்பி எலக்சன் டே" என்றும் தெரிவித்துள்ளார். அவர்களின் வருகையை அறிந்த ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் நடிகர் ரவி மோகனுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.