சினிமா செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் ரவி மோகன் சாமி தரிசனம்

தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகர் ரவி மோகன்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் ரவி மோகன் சாமி தரிசனம் செய்தார்.

திருச்செந்தூர் முருகன் கோவில்

இந்து மதக்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனிடையே, தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகர் ரவி மோகன். இவர் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

நடிகர் ரவி மோகன் சாமி தரிசனம்

இந்நிலையில், நடிகர் ரவி மோகன் இன்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்தை நிறைவு செய்தப்பின் கோவிலுக்கு வெளியே நின்ற ரசிகர்கள் வேண்டுகோளை ஏற்று அவர்களுடன் நடிகர் ரவி மோகன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

SCROLL FOR NEXT