சினிமா செய்திகள்

வைரலாகும் நடிகர் சண்முகபாண்டியனின் தந்தையர் தின பதிவு

உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் தந்தையர்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு உலக தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினம் ஒவ்வொருவரின் வாழ்விலும் அவர்களது தந்தையின் பங்களிப்புகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை கவுரவிக்கும் நாளாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் தந்தையர் தினத்தை முன்னிட்டு நடிகர் சண்முகபாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உங்கள் மீதான வியப்பும் மரியாதையும் எப்போதும் குறைந்ததில்லை. அன்றும், இன்றும், என்றும் என் ஹீரோ நீங்கள் மட்டும்தான். இனிய தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா... ஒரு நாள்கூட உங்களை நினைக்காமல் கடந்து போனதில்லை” என்று பதிவிட்டுள்ளார்.