சினிமா செய்திகள்

நடிகர் சூரியின் “மண்டாடி” படப்பிடிப்பு நிறைவு

‘மண்டாடி’ படம், படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது.

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. இவர் தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’ படத்தில் நடித்து வருகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் தெலுங்கு நடிகர் சுஹால், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘மண்டாடி’ படம், படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ரூ.75 கோடி செலவில் உருவாகி வரும் இந்த படம், சூரியின் நடிப்பில் முதல் பிரம்மாண்டப் படமாக இருக்கும் என்று தயாரிப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் கோடையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மதிமாறன் இயக்கிவந்த ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு கடலோரப் பகுதிகளில் எடுக்கப்பட்ட சவாலான மேக்கிங் காட்சிகளை பகிர்ந்து அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT