சினிமா செய்திகள்

குடும்பத்துடன் பாங்காக் சுற்றுலா சென்ற நடிகர் ஸ்ரீகாந்த்

ஜாமீனில் வெளியே வந்துள்ள ஸ்ரீகாந்த் குடும்பத்துடன் மகிழ்ச்சியோடு விடுமுறையை கொண்டாட பாங்காக் சென்றுள்ளார்.

ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவு, போஸ் உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகாந்த்.

கடந்த ஆண்டு ஜூன் 23ஆம் தேதி போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த், கிட்டத்தட்ட ஒரு மாத சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

சினிமா வாய்ப்புகள் குறைந்து திடீரென போதைப்பொருள் வழக்கில் சிக்கி சிறை சென்ற ஸ்ரீகாந்த் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். போதைப்பொருள் வழக்கில் கைதாகியதால் குற்ற உணர்வு மற்றும் பயம் காரணமாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்.

தற்போது ஸ்ரீகாந்த் குடும்பத்துடன் மகிழ்ச்சியோடு விடுமுறையை கொண்டாட பாங்காக் சென்றுள்ளார். பாங்காக் கடற்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை குடும்பத்தோடு சுற்றி பார்த்து மகிழ்ந்த ஸ்ரீகாந்த், அங்கு எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.