சென்னை,
நடிகர் விஜய்யை, புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி நேற்று சந்தித்து பேசியுள்ளார். சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அந்த சந்திப்பின் போது, சினிமா மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, மரியாதை நிமித்தமான சந்திப்பு என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்திப்பின்பேது, இருவரும் எடுத்துக்கெண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.