சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பல்வேறு தொகுதிகளில் வெற்றி விவரங்கள் தெரிய தொடங்கியுள்ளது. அந்த வகையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 8 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் தற்போதைய நிலவரப்படி தவெக 99 இடங்களிலும், திமுக கூட்டணி 68 இடங்களிலும், அதிமுக கூட்டணி 52 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. சட்டமன்ற தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் நடிகர் விக்ரம் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்டாகிராம் பக்கத்தில் விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள விக்ரம், "வாழ்த்துகள் நண்பா விஜய். இன்று நீ சரித்திரம் படைத்துவிட்டாய்" என்று தெரிவித்துள்ளார்.