சென்னை,
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார். அன்றைய தினமே 9 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் இதுவரை அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்து வந்தது. இதன் பின்பு, தமிழக அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது. இதன்படி முதல்-அமைச்சர் விஜய் உள்பட 10 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இது குறித்து தென்னிந்திய நடிகர்கள் சங்க பொதுச்செயலாளர் விஷால் பேசுகையில், அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை இலாகா ஒதுக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. திரைத்துறை சார்ந்த கோரிக்கைகளை எந்த அனுபவமும் இல்லாத ராஜ்மோகனிடம் வைப்பது சரியாக இருக்குமா? 30 ஆண்டுகள் சினிமாவில் பயணித்த முதல்-அமைச்சர் விஜயிடம் வைப்பது சரியாக இருக்குமா? அமைச்சர் ராஜ்மோகனை சிறுமைப்படுத்தும் நோக்கத்தில் இதை சொல்லவில்லை. இது என்னுடைய கருத்து மட்டுமே”
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.