சினிமா செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் தங்கதேர் இழுத்து வழிபட்ட நடிகர் யோகி பாபு

நடிகர் யோகி பாபு அடிக்கடி கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரான யோகி பாபுu, முன்னணி நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனித்த இடம் பிடித்துள்ளார். ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துள்ள அவர், தற்போது பல படங்களில் பிஸியாக உள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கெணத்த காணோம், எல்ஐகே ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இதற்கிடையில் ஆன்மீகத்தின் மீது அதிக நாட்டம் கொண்ட நடிகர் யோகி பாபு அடிக்கடி தமிழகத்தின் முக்கிய கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில், நேற்று சென்னை வடபழனியில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றார். அங்கு தங்கதேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்த அவர், முருகன் அருளைப் பெற்றார். இந்த நிகழ்வு அங்கு இருந்த பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது. சினிமா பிஸியான வாழ்க்கையிலும், ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் யோகி பாபுவின் இந்த செயல் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.