சினிமா செய்திகள்

காதலரை மணந்த நடிகை அஞ்சு குரியன்

நடிகை அஞ்சு குரியனும் தொழிலதிபர் ரோஷனும் கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

நடிகை அஞ்சு குரியன், தனது காதலரான தொழிலதிபர் ரோஷன் கரிப்பப்பரம்பில் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

‘நேரம்’, ‘சென்னை டூ சிங்கப்பூர்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஓஹோ எந்தன் பேபி’, ‘அதர்ஸ்’, ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மாட்போன் சிம்ரனும்’, ‘இதயம் முரளி’ போன்ற படங்களில் நடித்த அஞ்சு குரியன், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

திருமணம்

இந்த நிலையில், அஞ்சு குரியன் தன் காதலரான ரோஷன் கரிப்பப்பரம்பில் என்பவரை கடந்த நவம்பர் 7ம் தேதி திருமணம் செய்துள்ளார். நடிகை அஞ்சு குரியனும் ரோஷனும் கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே நிச்சயதார்த்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

நடிகை அஞ்சு குரியன் தனது திருமண புகைப்படங்களையும் வீடியோவையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “இன்று, நான் என் வாழ்நாள் முழுவதும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கேட்ட அந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு, என் வாழ்க்கையின் மிக அழகான புதிய அத்தியாயத்தை தொடங்குகிறேன். ரோஷன் கரிப்பப்பரம்பில் இது வெறும் இரண்டு இதயங்களுக்கு இடையிலான வாக்குறுதி மட்டுமல்ல, கடவுளுடன் செய்துகொண்ட ஒப்பந்தம். நீண்ட காலமாக எனது மனதிற்குள் வைத்திருந்த ஒரு மாபெரும் கனவை எனது குழந்தை போன்ற உள்ளம் இப்போது வாழ்ந்து பார்க்கிறது. இது வெறும் திருமணம் மட்டுமல்ல... ஆயுள் முழுவதும் சிறிய சிறிய தருணங்கள், முடியாத சிரிப்புகள், இணைந்து வளர்வது, ஒருவரையொருவர் தேர்ந்தெடுப்பது மற்றும் அன்பால் நிறைந்த ஒரு அழகான வீட்டை கட்டுவது” என பதிவிட்டுள்ளார்.

நடிகை அஞ்சு குரியன் - ரோஷன் ஜோடிக்குத் திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT