சினிமா செய்திகள்

நடிகை அனுபமாவின் “போகி” திரைப்படத்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு

சம்பத் நந்தி இயக்கத்தில் சர்வானந்த், அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் ‘போகி’ தெலுங்கு படம் ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகவிருக்கிறது.

ஸ்ரீ சத்யா சாய் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சம்பத் நந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள போகி எனும் தெலுங்கு படத்தில் அனுபமா பரமேஸ்வரன் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சர்வானந்த் இதில் நாயகனாக நடிக்க டிம்பிள் ஹையாதி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகிறார்கள்.

1960ல் தெலங்கானா, மகாராஷ்டிரா எல்லைப் பிரச்னைகளை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘போகி’ தெலுங்கு படத்தில் கந்துலா சுலோசனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன் இதில் நடித்துள்ளதாக இயக்குநர் போஸ்டரை வெளியுட்டுள்ளார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இது குறித்து இயக்குநர், “உலகமே... எங்களது கந்துலா சுலோச்சனா ராணியைச் சந்தியுங்கள். இயற்கையின் குழந்தை, கங்கையின் தாய், கந்துலாவின் பெருமை, போகி படத்தின் ஆன்மா” என குறிப்பிட்டுள்ளார்.