சினிமா செய்திகள்

ஆன்டியான அனுஷ்கா ஷெட்டி...! எடைகுறையாததால் நெட்டிசன்கள் விமர்சனம்

அனுஷ்கா ஆன்ட்டி மாதிரி ஆகிவிட்டார்.. ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறார் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

தினத்தந்தி

பெங்களூரு

சூப்பர் படத்தின் மூலம் தனது கேரியரை தொடங்கிய அனுஷ்கா, அருந்ததி படத்தின் மூலம் சூப்பர் ஸ்டாரானார். ஒரு பக்கம் ஸ்டார் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டே, பாகமதி போன்ற ஹீரோயின் சார்ந்த படங்களில் நடித்தார். ஆனால் இஞ்சு இடுப்பழகி திரைப்படம் அவருக்கு பல பிரச்சனைகளை உருவாக்கியது. படத்திற்காக கூட்டிய எடையை அனுஷ்காவால் குறைக்க முடியவில்லை. பல நாட்களாக உடல் எடை குறைப்பு சிகிச்சை எடுத்து வந்தாலும், முன்பு போல் உடல் எடை குறைய முடியாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

35 வயதாகியும் அனுஷ்கா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இதற்கிடையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மனம் திறந்து பேசியுள்ளார்.

சமீபத்தில் புதிய படம் ஒன்றிற்கு அனுஷ்கா ஷெட்டி உடல் எடையை குறித்து உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் சமீபத்தில் வெளியான அவரது புகைப்படங்களை பார்த்து, அனுஷ்கா ஷெட்டி உடல் எடையை குறைத்து விட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு அனுஷ்கா தனது தாயுடன் பெங்களூருவில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கபட்ட அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின. அதில் அனுஷ்கா மிகவும் குண்டாக தெரிகிறார். உடனே நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் வடிவில் டிரோல் செய்ய ஆரம்பித்தனர்.

அனுஷ்கா ஆன்ட்டி மாதிரி ஆகிவிட்டார்.. ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறார் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?