சினிமா செய்திகள்

மகளின் பிறந்த நாளை ஜப்பானில் கொண்டாடிய நடிகை அசின்

இயக்குநர் ஜீவாவின் "உள்ளம் கேட்குமே" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அசின்.

நடிகை அசின், தன்னுடைய மகள் அரின் ராய்ன் 9வது பிறந்த நாளை, ஜப்பானில் கோலாகலமாகக் கொண்டாடியிருக்கிறார்.

இயக்குநர் ஜீவாவின் "உள்ளம் கேட்குமே" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசின். அந்தப் படம் தாமதமாக, நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அவர் நடித்த "எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி" படம் முதலில் வெளியானது. பின்னர் அவர் நடித்த "கஜினி" படம் மிகப்பெரிய வெற்றிபெற்று அவரை தமிழின் முன்னணி நாயகியாக உயர்த்தியது. தொடர்ந்து விஜய்யுடன் "சிவகாசி", "போக்கிரி", "காவலன்", அஜித்துடன் "ஆழ்வார்", "வரலாறு", சூர்யாவுடன் "வேல்", கமலுடன் "தசாவதாரம்" உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு அசின் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். 2017 -ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி, அசின் - ராகுல் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அசின்- ராகுல் பெயரில் எழுத்துக்களை எடுத்து, ‘அரின்’ என்று மகளுக்கு பெயர் சூட்டியுள்ளனர்.

திருமணத்துக்குப் பிறகு அசின் நடிப்பில் இருந்து விலகியுள்ளார். பொதுவெளியில் திரைப்பட விளம்பரங்களில் கலந்துகொள்வதிலும் தவிர்த்து வருகிறார். கடைசியாக தமிழில் ‘காவலன்’ படத்திலும் ‘ஆல் இஸ் வெல்’ என்ற இந்தி படத்திலும் நடித்திருந்தார்.

மகளின் 9வது பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகை அசின், தன்னுடைய மகள் அரின் ராய்ன் 9வது பிறந்த நாளை, ஜப்பானில் கோலாகலமாகக் கொண்டாடியிருக்கிறார். இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அசின் பகிர்ந்துள்ளார். ஜப்பானில் பல்வேறு கலைகளைக் கற்கும் புகைப்படங்களும் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT