சினிமா செய்திகள்

சாய் அபயங்கரின் இசை ஆல்பத்தில் இணைந்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்

சாய் அபயங்கர் இசையில் 6வது இன்டீ பாடலான ‘ரதிமா’ பாடல் வருகிற 24ந் தேதி வெளியாகவுள்ளது.

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் ‘ரதிமா’ இசை ஆல்பத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார்.

ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலம்

சாய் அபயங்கர், ‘கட்சி சேரா’, ‘ஆச கூட’ உள்ளிட்ட ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரது பாடல்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து, திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தன.

‘டியூட்’ மூலம் திரையுலகில் அறிமுகம்

சாய் அபயங்கர் இசையமைத்த முதல் திரைப்படமாக ‘டியூட்’ வெளியானது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ‘மார்ஷல்’, அட்லி இயக்கும் படம், பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம், தனுஷின் ‘ஓம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

5-வது இசை ஆல்பம்- ‘பவழ மல்லி’

சாய் அபயங்கர் ‘பவழ மல்லி’ என்ற 5-வது இன்டீ பாடலை சமீபத்தில் வெளியிட்டார். இந்த பாடலை விவேக் எழுத, சுருதி ஹாசன் பாடியிருந்தார். இந்தப் பாடலில் நடிகை கயாடு லோஹர் உடன் சாய் அபயங்கர் இணைந்து நடனமாடியிருப்பது ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. இந்த பாடல் வெளியான குறுகிய காலத்தில் அதிக பார்வைகளை பெற்றுள்ளது. அதன்படி, யூடியூபில் இதுவரை 28 கோடி பார்வைகளை கடந்து வைரலாகியுள்ளது.

புதுமையான இசை மொழி

இன்டீ பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த சாய் அபயங்கர், தற்போது முன்னணி திரைப்படங்களிலும் இசையமைத்து வருகிறார். புதுமையான இசை அணுகுமுறையால் தமிழ் திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தி வருகிறார்.

6-வது இன்டீ பாடல் குறித்த அப்டேட்

சாய் அபயங்கர் தனது 6-வது இன்டீ பாடல் வருகிற 24ந் தேதி ‘ராதிமா’ என்ற புதிய இன்டீ பாடல் வெளியாக இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். இதனால், சாய் அபயங்கரின் அடுத்த இன்டீ பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சாய் அபயங்கரின் இசை ஆல்பத்தில் இணைந்த பாக்யஸ்ரீ போர்ஸ்

இந்த நிலையில், சாய் அபயங்கரின் ‘ராதிமா’ ஆல்பத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடித்துள்ளார். இப்பாடல் வருகிற 24ந் தேதி வெளியாகவுள்ளது.

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘காந்தா’படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீபோர்ஸ். தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘சேயோன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘மிஸ்டர் பச்சன்’ படம் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு' சென்றது.