சினிமா செய்திகள்

அஜந்தா-எல்லோரா திரைப்பட விழாவில் இளையராஜாவிடம் விருது பெற்ற பிரபல நடிகை

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் விருது அளித்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் ‘மிஸ்டர் பச்சன்’ மூலம் தெலுங்கில் அறிமுகமானாலும், 2025 ஆம் ஆண்டில் பல படங்களில் நடித்து, தென்னிந்திய சினிமாவில் மிகவும் பரபரப்பான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். இந்த ஆண்டு அவரின் மூன்று படங்கள் வெளியாகின. கிங்டம், காந்தா மற்றும் ஆந்திரா கிங் தாலுகா .இந்தப் படங்கள் எதுவும் பெரிய அளவில் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெறவில்லை என்றாலும், பாக்யஸ்ரீ தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழில் காந்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நடிப்பாற்றலுடன் கூடிய அழகான தோற்றத்தால் தமிழ், தெலுங்கு திரைத்துறையில் பல படங்களில் வாய்ப்பைப் பெற்று வருகிறார். தமிழில் வெளியான காந்தா படத்திலும் அவரது நடிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பாக்யஸ்ரீ போர்ஸ், நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி நடித்த ‘லெனின்’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில். நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் இளையாராஜாவுடனான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் “டியர் இளையராஜா சார், எனது சொந்த மண்ணான சத்ரபதி சம்பாஜிநகரில் நடைபெற்ற அஜந்தா எல்லோரா திரைப்பட விழாவில் உங்களிடம் இருந்து விருது வென்றதை மிகவும் கவுரமாக கருதுகிறேன். உங்கள் ஆசிர்வாதத்துடன் எனது பயணத்தைத் தொடங்குவதில் மிகுந்த கருணையாக உணர்கிறேன். அழகான கவுரவம் மற்றும் மரத்வாடாவின் மகளான என்னை இவ்வளவு கொண்டாடியதிற்கு ஏ.ஐ.எப்.எப்-க்கு மிக்க நன்றி. கருணைமிக்க வார்த்தைகளுக்காக ரசூல்பூக்குட்டி சாருக்கும் நன்றிகள். இந்தப் பயணத்தை மறக்க முடியாத ஞாபகமாக்கிய சந்திரகாந்த் குல்கர்னி அவர்களுக்கும் சிறப்பான நன்றிகள்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.