சினிமா செய்திகள்

1998-ல் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் படங்களை பகிர்ந்தார் நடிகை பூமிகா!

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துத் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை பூமிகா சாவ்லா. 2000-ஆம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர், அதன் பிறகு குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தமிழில் விஜயுடன் நடித்த பத்ரி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து சூர்யாவுடன் சில்லுனு ஒரு காதல் மற்றும் ரோஜா கூட்டம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த பூமிகா, பின்னர் கேரக்டர் ரோல்களுக்கு மாறி தனது நடிப்பு திறனை மேலும் நிரூபித்தார். குறிப்பாக எம்.எஸ். தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி படத்தில் தோனியின் அக்காவாக நடித்தது பாராட்டுகளை பெற்றது.

2007-ஆம் ஆண்டு பாரத் தாக்கூரை திருமணம் செய்து கொண்ட பூமிகா, சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவர் யுபோரியா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை பூமிகா சாவ்லா 1998ல் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் படங்களை பகிர்ந்தார் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.