புதுடெல்லி,
இந்தி டிவி தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை சஞ்சிதா உகலே (வயது 22). இவர் மும்பையின் நாலசோபாரா கிழக்கில் பெற்றோர், சகோதரியுடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சஞ்சிதா உகலே படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் திடீர் என்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய், சகோதரி வீட்டுக்கு வந்தபோது சஞ்சிதா உகலே தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.அவரை மீட்டு உடனடியாக தனியார் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இந்தி சின்னத்திரை உலகினரிடமும் அவரது ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். சஞ்சிதாவின் தந்தை மச்சிந்திர உகலே அளித்த புகாரின் அடிப்படையில், அச்சோல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்கொலைக்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக சஞ்சிதா உகலே யின் கசெல்போன் பதிவுளை ஆய்வு செய்து வருகின்றனர். அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. சஞ்சிதா உகலே இறப்ப தற்கு சில மணி நேரங்கள் முன்பு தனது இன்ஸ்டா கிராமில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். வழக்கமாக சஞ்சிதா சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிடுவதை ஆர்வமாக கொண்டிரந்தார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 1 லட்சத்து 39 ஆயிரம் பின் தொடர்பாளர்கள் உள்ளனர்.
சஞ்சிதா உகலேயின் தற்கொலை குறித்து அவரது உறவினர் ஆகாஷ் உகலே அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக கூறியதாவது:-அவர்
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ந்தேதி அன்று தற்கொலை செய்துகொண்டார். அதே நாளில் என் சகோதரியும் தற்கொலை செய்துள்ளார். ஏற்பட்ட மன அழுத்தம்தான் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொ லைக்கு காரணமாக அமைந்தது. அதுபோன்ற நிலைதான் எனது சகோதரிக்கும் ஏற்பட்டுள்ளது. போலீசார் இதை விசாரிக்க வேண்டும் என்றார்.