சினிமா செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை திவ்யபாரதி

திரைப்படங்களைத் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர் திவ்யபாரதி.

திருப்பதி,

சாமி தரிசனம் செய்து வெளியான வந்த திவ்யபாரதியை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தும் திவ்யபாரதி

மாடலிங் துறையின் மூலம் திரையுலகில் அறிமுகமான திவ்யபாரதி, 'பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அறிமுக படத்திலேயே ரசிகர்களை தன்வசப்படுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து 'கிங்ஸ்டன்', 'மதில் மேல் காதல்', 'ஆசை', 'லிங்கம்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.தற்போது 3 புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்

திரைப்படங்களைத் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் திவ்யபாரதி, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். குறிப்பாக தனது நீளமான கூந்தல் மற்றும் ஸ்டைலான தோற்றத்தால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

திருப்பதியில் சாமி தரிசனம்

இந்த நிலையில், ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட நடிகை திவ்யபாரதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த திவ்யபாரதியை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

SCROLL FOR NEXT