சினிமா செய்திகள்

3,700 மீட்டர் உயரத்தில் சாகசப் பயணம் செய்த நடிகை கயாடு லோஹர்

இயற்கை எழில் கொஞ்சும் பின்னணியில் அவர் எடுத்துக்கொண்ட செல்பிக்கள் எனப் பல சுவாரஸ்யப் புகைப்படங்களாகப் பகிர்ந்துள்ளார்.

டேராடூன்,

சாகசப் பயணம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தயாரா புக்யால் மலையேற்றப் பாதையில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சிகரத்தின் உச்சியை அடைந்த தருணங்களை புகைப்படங்களாகப் பகிர்ந்துள்ளார்.

பனி படர்ந்த மலைச்சிகரங்கள், குளிர்கால ஜாக்கெட்டுகள், மலைப்பாதையில் ஏறும் காட்சிகள், கூடாரம், இரவு நேர நெருப்பு மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் பின்னணியில் அவர் எடுத்துக்கொண்ட செல்பிக்கள் எனப் பல சுவாரஸ்யப் புகைப்படங்களாகப் பகிர்ந்துள்ளார்.

நெகிழ்ச்சிப் பதிவு

இந்தப் புகைப்படங்களுடன் கயாடு லோஹர் வெளியிட்டுள்ள பதிவில், "பல சிகரங்களின் முதல் பயணம் இது... தயாரா புக்யால் பகாரியா டாப் 3,700 மீட்டர். இது ஒரு சிறிய தொடக்கம்தான்; இன்னும் பல சிகரங்களை அடைய வேண்டியுள்ளது.

நான் எப்போதும் ஒரு மலைப் பெண்ணாகவே இருந்துள்ளேன், இனியும் அப்படியே இருப்பேன். இதைவிட எனக்குப் பிடித்தமான இடம் வேறு எதுவுமில்லை" என மனம் நெகிழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT