சினிமா செய்திகள்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடிகை மாளவிகா மோகனன் சாமி தரிசனம்

தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்த மாளவிகா மோகனனை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர்.

சென்னை,

மாளவிகா மோகனன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். கோவிலுக்கு வந்த அவர், சிறப்பு தரிசனம் செய்து சாமியை வழிபட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் கவனம்

ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து ‘மாறன்’, ‘தங்கலான்’, ‘ஹிருதயப்பூர்வம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ‘சர்தார் 2’, ‘பாக்கெட் நாவல்’ உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘இதயம் முரளி’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பார்த்தசாரதி கோவிலில் தரிசனம்

இந்நிலையில், மாளவிகா மோகனன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். கோவிலுக்கு வந்த அவர், சிறப்பு தரிசனம் செய்து சாமியை வழிபட்டுள்ளார்.

ரசிகர்களுடன் செல்பி

தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்த மாளவிகா மோகனனை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர். அவருடன் செல்பி எடுத்துக்கொண்டு ரசிகர்கள் மகிழ்ந்தனர். ரசிகர்களின் அன்பை ஏற்றுக்கொண்ட மாளவிகா, அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

மேலும், கோவில் வளாகத்தில் மாளவிகா மோகனன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். தற்போது அவர் கோவில் தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

SCROLL FOR NEXT