விக்ரம் நடிப்பில் வெளியான ‘கந்தசாமி’ படத்தில் இடம் பெற்ற ‘லேடி என் பேரு மீனா குமாரி. என் ஊரு கன்னியாகுமரி, போலாமா குதிர சவாரி, செய்யலாமா செம்ம கச்சேரி’என நாக்கில் வளையம் குத்திக் கொண்டு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை திரையரங்குகளில் ஆட்டம் போட வைத்தவர் முமைத்கான். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.
தொடர்ந்து பல மொழிகளில் நடித்து வந்த முமைத்கான் சினிமாவில் இருந்து திடீரென விலகினளார். திடீரென விபத்து ஏற்பட்டு அவர் 15 நாட்கள் கோமாவில் இருந்துள்ளார். சினிமாவில் ஏற்பட்ட இடைவெளி குறித்து முமைத்கான் அளித்த பேட்டியில், “நான் சினிமாவை விட்டு விலகவில்லை. எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. என் மூளையில் 5 நரம்புகள் உடைந்தன. இதையடுத்து என்னை 7 வருடங்கள் வேலை செய்பக் கூடாது என்று கூறினார்கள். தூங்குவது கூட சாத்திய மில்லாமல் இருந்தது. வலிப்பு தாக்கங்களுக்கு நான் மருத்து சாப்பிட்டு கொண்டிருந்தேன். அதனால் என் உடல் எடை அதிகரித்தது. கடவுள் ஒரு தடையை விதித்தார். நான் அதை ஏற்றுக் கொண்டேன். இப்போது யாரையாவது கண்டு பிடித்தால் திருமணத்திற்கு மறுக்க மாட்டேன். என் நாக்கில் வளை யம் போட்டு கொண்ட போது 8 மாதங்களுக்கு 3 முறை முகம் வீங்கியது” என்று அவர் கூறினார்.
இப்போது, ஹைதராபாத்தில் ‘விலைக்’ என்ற என்ற மேக்கப் மற்றும் சிகை அலங்கார பயிற்சி அகாடமியைத் தொடங்கியுள்ளார். இது அவரை வெற்றிகரமான தொழிலதிபராக மாற்றி இருக்கிறது.
இது பற்றி முமைத்கான் கூறும்போது, “நான் 13 வயதிலிருந்தே என் பெற்றோருக்காக உழைக்கத் தொடங்கி விட்டேன். என் இளமைக் காலத்தை உழைப்பில் செலவழித்ததால், திருமணம் பற்றியோசிக்க நேரமில்லை. கடவுள் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தார், பிறகு அவரே எடுத்துக்கொண்டார். இப்போது மீண்டும் புதிய பாதையைக் காட்டியிருக்கிறார்” என்றார்.