சினிமா செய்திகள்

சிறையில் வேறு அறைக்கு மாற்றக்கோரி செசன்சு கோர்ட்டில் நடிகை பவித்ரா கவுடா மனு

சிறையில் தன்னை வேறு அறைக்கு மாற்றக்கோரி நடிகை பவித்ரா கவுடா பெங்களூரு செசன்சு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

பெங்களூரு,

நான் அடைக்கப்பட்டுள்ள அறையில் 30 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். நள்ளிரவில் தூங்க முடியவில்லை. தினமும் ஏதாவது ஒரு பிரச்சினை எழுகிறது. என நடிகை பவித்ரா கவுடா பெங்களூரு செசன்சு கோர்ட்டில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகை பவித்ரா கவுடா

சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடி கர்தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 14-வது குற்றவாளியான பிரதோஷ் என்பவர் அரசு சாட்சியாக மாறியுள்ளார். இந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நடிகை பவித்ரா கவுடா பெங்களூரு செசன்சு கோர்ட்டில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், நான் அடைக்கப்பட்டுள்ள அறையில் 30 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். நள்ளிரவில் தூங்க முடியவில்லை. தினமும் ஏதாவது ஒரு பிரச்சினை எழுகிறது. வெளிநாட்டு பெண் கைதிகள் மூலம் தினமும் ஏதாவது எனக்கு ஒரு தொந்தரவு ஏற்படுகிறது. முக்கியமாக அவர்கள் தான் எனக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள்.

நிம்மதியாக இருக்க முடியவில்லை

சிறையில் நிம்மதியாக இருப்பது சாத்தியமில்லை. என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அதனால் நீதிபதியே நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு, விசாரணை நடத்தி எனது நிலையை தெரிந்து கொண்டு பின்னர் வேறு அறைக்கு மாற்ற வேண்டும். இதற்கு முன்பும் நான் இதேபோல் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தேன். அதில், சிறையில் எனக்கு வேறு அறையை ஒதுக்கி தருமாறு கேட்டிருந்தேன். இதுபற்றி சிறை அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் தாங்களாக இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று சிறை அதிகாரிகள் கூறிவிட்டனர்.

உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்

அதனால் நீதிபதி நேரடியாக வந்து விசாரித்து தனக்கு வேறு அறையை ஒதுக்கி தர வேண்டும். இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்' என்று கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் கோர்ட்டில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT