சினிமா செய்திகள்

கர்ப்பிணியாக இருந்தபோது ஒரு நாளைக்கு 100 சிகரெட் புகைத்தேன்; பிரபல நடிகையின் தாய் பரபரப்பு பேட்டி

நான் புகைப்பிடிப்பவள் இல்லை. ஆனால், அதன்பின்னர் சிகரெட்டுகளை புகைக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது என கூறுகிறார்.

புனே

கர்ப்பிணியாக இருந்தபோது ஒரு நாளைக்கு 100 சிகரெட் புகைத்தேன் என பிரபல நடிகையின் தாய் பரபரப்பு பேட்டியளித்து உள்ளார்.

1993-ம் ஆண்டு கும்ரா என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. அதில், அப்போது பிரபலம் வாய்ந்த நடிகை முக்கிய வேடத்தில் நடித்து வந்திருக்கிறார். அவர் கர்ப்பிணியாக இருப்பது பற்றி அவருக்கே அப்போது தெரியவில்லை.

படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. இதுபற்றி அவர் கூறும்போது, சிகரெட் புகைக்கும் காட்சி படம் பிடிக்கப்பட்டு வந்தது. அதனால், ஒரு நாளைக்கு 100 சிகரெட்டுகள் வரை புகைத்தேன். அப்போது, நான் கர்ப்பிணியாக இருக்கிறேன் என்பது சரியாக எனக்கு தெரியவில்லை.

பிரபல நடிகை

நான் புகைப்பிடிப்பவள் இல்லை. ஆனால், அதன்பின்னர் சிகரெட்டுகளை புகைக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது என கூறுகிறார். இதன்பின்னர், அவருக்கு மகள் பிறந்துள்ளார். அவர் வேறு யாருமில்லை. பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் தான் அவர். நடிகை சோனி ரஸ்தான் தான் அவருடைய தாயார் ஆவார்.

இவருடைய கணவர் பிரபல தயாரிப்பாளர் மகேஷ் பட். இந்த தம்பதிக்கு ஷாகீன் பட் என்ற மற்றொரு மகளும் உள்ளார். அவருடைய இளைய சகோதரியே ஆலியா பட் ஆவார்.

SCROLL FOR NEXT