சினிமா செய்திகள்

நிவின் பாலியை சந்தித்த வீடியோவை பகிர்ந்த நடிகை ஷோபனா

பிரிஸ்பேன் நகரில் நிவின் பாலியை சந்தித்த காட்சிகளை ஷோபனா வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

மெல்போர்ன்,

பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி தனது குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நிவின் பாலி ஆஸ்திரேலியாவில் பொழுதை கழித்து வரும் நிலையில், அங்கு நடிகை ஷோபனா அவரை எதேச்சையாக சந்தித்துள்ளார். பிரிஸ்பேன் நகரில் நிவின் பாலியை சந்தித்த காட்சிகளை ஷோபனா வீடியோவாக பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை ஷோபனா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட 230-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இவர் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞரும் ஆவார். இரண்டு தேசிய திரைப்பட விருதுகள், ஒரு கேரள மாநில திரைப்பட விருது மற்றும் பல விருதுகளை வென்றுள்ளார். நடிகை ஷோபனா தற்போது பரதநாட்டிய பள்ளியை நடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல், அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.