சினிமா செய்திகள்

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் நடிகை ஷ்ரத்தா கபூர்?

பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவின் பரபரப்பான நடிகராக திகழும் விஜய் சேதுபதி, தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். பல மொழிகளில் பிஸியாக இருக்கும் அவர், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், புதிய தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரங்களில் பரவி வருகிறது. அதன்படி, ‘விடாமுயற்சி’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி தனது அடுத்த படத்தை விஜய் சேதுபதியை வைத்து இயக்க உள்ளாராம்.

இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாகவும், சக்திவாய்ந்த வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இந்த தகவல் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.