சினிமா செய்திகள்

நடிகை சினேகா இல்லத்தில் கோலாகலமாக நடந்த வரலட்சுமி விரத பூஜை

நடிகை சினேகா பகிர்ந்த வரலட்சுமி விரத பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களின் லைக்ஸ்களையும் வாழ்த்துகளையும் குவித்து வருகின்றன.

பிரபல நடிகை சினேகா தனது வீட்டில் வரலட்சுமி விரத பூஜையை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார். சினேகா பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கணவரின் நீண்ட ஆயுள், குடும்ப நலன் மற்றும் செல்வச் செழிப்பிற்காகப் பெண்களால் பாரம்பரியமாக அனுசரிக்கப்படும் வரலட்சுமி விரதம் நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, பிரபல நடிகை சினேகா தனது வீட்டில் வரலட்சுமி விரத பூஜையை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார். பாரம்பரியமிக்க பட்டுப்புடவை மற்றும் ஆபரணங்கள் அணிந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூஜை அறையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பக்தி, நன்றி மற்றும் ஆசீர்வாதங்களுடன் அழகான கொண்டாட்டம் பிரார்த்தனைகளால் போற்றப்பட்ட பாரம்பரியங்கள் மற்றும் தெய்வீக ஆசீர்வாதங்களை தேடும் அமைதியான அழகு இந்த வரலட்சுமி விரதத்தை பட்டுப்புடவையுடன் கொண்டாடுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

நடிகை பிரீத்தா ஹரி, சரண்யா பொன்வண்ணன், இயக்குனர் பாலாவின் முன்னாள் மனைவி முத்துமலர் உள்ளிட்ட பலர் சினேகா வீட்டு வரலட்சுமி பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். சினேகா பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களின் லைக்ஸ்களையும் வாழ்த்துகளையும் குவித்து வருகின்றன.