சினிமா செய்திகள்

காதலரை பிரிந்த நடிகை சுனைனா

நடிகை சுனைனா ஐக்கிய அரபு அமீரத்தை சேர்ந்த காலித் அல் அமெரிக்கை காதலித்து வந்தார்.

‘காதலில் விழுந்தேன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்து திரைக்கு வந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தில் சிறப்பாக நடித்து இருந்ததாகவும் பாராட்டுகள் கிடைத்துள்ளன. சீனுராமசாமியின் ‘நீர்ப்பறவை’ படத்தில் சுனைனா நடித்திருந்தார். மாசிலாமணி, வம்சம், பசங்க 2 உள்பட சில படங்களில் நடித்த இவர், கொஞ்ச காலமாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் வருகிறார். பாண்டி ஒலிபெருக்கி நிலையம், ரெஜினா, சமர், வன்மம், தெறி, கவலை வேண்டாம், நம்பியார், காளி, ட்ரிப் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சுனைனா ஐக்கிய அரபு அமீரத்தைச் சேர்ந்த காலித் அல் அமெரிக்கை காதலித்து வந்தார். இருவரும் நிச்சயதார்த்தத்தில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில் சுனைனா தற்போது தனது காதலர் காலித்தை பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இருவரும் சமூக வலைதளத்தில் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதை நிறுத்தியுள்ளனர். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் நீக்கியுள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே உள்ள காதலில் பிரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து சுனைனாவோ அவரது காதலரோ எந்த கருத்துக்களையும் வெளியிட வில்லை