சினிமா செய்திகள்

நடிகை தமன்னா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்

அதிகாலையில் கோவிலுக்கு சென்ற அவர், பாரம்பரிய உடையில் சாமி தரிசனம் செய்து சிறப்புப் பூஜைகளில் பங்கேற்றார்.

திருப்பதி,

நடிகை தமன்னா தனது தந்தையுடன் திருப்பதி திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். அர்ச்சகர்கள் தமன்னாவுக்கு வேத மந்திரங்கள் முழங்க ஆசீர்வாதம் வழங்கி, தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினர்.

பிசியான நடிகை தமன்னா

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் நடிகை தமன்னா. தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘புருஷன்’ திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர இந்தியில் 5 புதிய படங்களிலும் நடித்து வருகிறார். சினிமாவைத் தாண்டி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வரும் தமன்னா, தொழில் துறையிலும் ஈடுபட்டு வருகிறார்.

தந்தையுடன் திருப்பதி பயணம்

இந்த நிலையில், நடிகை தமன்னா தனது தந்தையுடன் திருப்பதி திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். அதிகாலையில் கோவிலுக்கு சென்ற அவர், பாரம்பரிய உடையில் சாமி தரிசனம் செய்து சிறப்புப் பூஜைகளில் பங்கேற்றார். தரிசனம் முடிந்த பின்னர் ரங்கநாயக்கலு மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் தமன்னாவுக்கு வேத மந்திரங்கள் முழங்க ஆசீர்வாதம் வழங்கி, தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினர்.

ரசிகர்களுடன் அன்பாக பேசிய தமன்னா

தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்த தமன்னாவிடம் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும், செல்ஃபி எடுக்கவும் ஆர்வம் காட்டினர். அப்போது சிறுவன் ஒருவர் செல்ஃபி கேட்ட நிலையில், அவருடன் அன்பாகப் பேசி தமன்னா புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

SCROLL FOR NEXT