சினிமா செய்திகள்

குழந்தைகள், எதிர்கால தாய்மை குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா

தீபக் குமார் மிஷ்ரா இயக்கத்தில் தமன்னா நடித்துள்ள ‘தி விவான்’ படம் 10 நாட்களில் ரூ. 76 கோடி வசூலித்துள்ளது.

தமன்னா தனது எதிர்கால தாய்மை குறித்து வெளிப்படையாக பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பிசியான நடிகை தமன்னா

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் இவர், தனது நடிப்புடன் கவர்ச்சி நடனங்களாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கும் ‘புருஷன்’ திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர இந்தியில் 5 புதிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். சினிமாவைத் தாண்டி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வரும் அவர், சொந்தமாக தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

குழந்தை தொடர்பான கேள்வி

இந்நிலையில், எதிர்காலத்தில் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டால், எப்படிப்பட்ட தாயாக இருப்பீர்கள்? என நடிகை தமன்னாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

தமன்னாவின் பதில்

அதற்கு பதிலளித்த நடிகை தமன்னா, “நான் ஒரு குழந்தைக்கு தாயானால் மிகவும் கண்டிப்பான அம்மாவாக இருப்பேன் என்று என் அம்மா நினைக்கிறார். ஆனால், அவரது கருத்தில் என உடன்பாடு இல்லை. நான் மிகவும் கூலான அம்மாவாகத்தான் இருப்பேன். என் குழந்தைகளுடன் மிகவும் சகஜமாகவும், ஜாலியாகவும் பழக விரும்புகிறேன். அவர்களிடம் எப்போதும் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் தாயாக இருக்க மாட்டேன்.

இன்று பள்ளிக்கு போகவேண்டாம், சந்தோஷமாக வீட்டிலேயே இருங்கள்' என்று சொல்லும் அம்மாவாக நான் இருக்க விரும்புகிறேன். என் குழந்தைகளுடன் ஒரு தாயாக மட்டுமல்லாமல், அவர்களின் நல்ல தோழியாகவும் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை” என தமன்னா கூறியிருக்கிறார்.

தாய்மை குறித்து தமன்னா பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமன்னாவின் ‘தி விவான்’ பட வசூல்

தீபக் குமார் மிஷ்ரா இயக்கத்தில் தமன்னா நடித்துள்ள ‘தி விவான்’ படம் 10 நாட்களில் ரூ. 76 கோடி வசூலித்துள்ளது.

SCROLL FOR NEXT