சினிமா செய்திகள்

திருப்பதி கோவிலில் நடிகை திரிஷா சாமி தரிசனம்

நடிகை திரிஷா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட உலகில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, தனது நடிப்பால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தமிழ் மற்று தெலுங்கில் பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ள திரிஷா ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார். அவரது படங்களை தாண்டி தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் அடிக்கடி இணையத்தில் பேசப்படுவது வழக்கம்.

தமிழ், தெலுங்கில் படங்களில் நடித்து கொடிகட்டி பறக்கிறார். சூர்யாவுடன் கருப்பு படத்தில் நடிகை திரிஷா நடித்துள்ளார். 42 வயதான திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சமீபத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் நடிகை திரிஷா குறித்து பேசியது பெரும் கண்டனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில், நடிகை திரிஷா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை திரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் "சிறந்த நாள் இது" என்று தெரிவித்தார். பக்தர்கள் நடிகை திரிஷாவுடன் செல்பி எடுத்து உற்சாகம் அடைந்தனர்.

SCROLL FOR NEXT