சினிமா செய்திகள்

நடிகை ஊர்வசியின் மகள் தேஜாலக்ஷ்மி ஹீரோயினாக அறிமுகம்

அனுப் ஆண்டனி இயக்கும் 'புல்லி' திரைப்படத்தின் மூலம் தேஜாலக்ஷ்மி ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

சென்னை,

நடிகை ஊர்வசியின் மகள் தேஜாலக்ஷ்மி ஊர்வசி நாயர் கன்னட திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

'புல்லி' படத்தில் கதாநாயகி

தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஊர்வசி. இவரது மகள் தேஜாலக்ஷ்மி ஊர்வசி நாயர், தற்போது கன்னட திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அவர், நடிகர் புவன் பொன்னண்ணாவுக்கு ஜோடியாக 'புல்லி' என்ற படத்தில் நடிக்கிறார்.

8 ஆண்டுகளுக்கு பிறகு ஊர்வசி ரீ-என்ட்ரி

இப்படத்தின் மூலம் நடிகை ஊர்வசி சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னட திரையுலகில் மீண்டும் நடிக்கிறார். மேலும், தாயும் மகளும் இணைந்து ஒரே கன்னட படத்தில் முதன்முறையாக திரை பகிர்ந்து கொள்வதும் இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும். இதில் ஊர்வசி, புவன் பொன்னண்ணாவின் தாயாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

டார்க் காமெடி கதை

அனுப் ஆண்டனி இயக்கும் 'புல்லி' திரைப்படம் டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகி வருகிறது. தாய்-மகன் உறவை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தில் அச்சுத் குமார், ஓம் பிரகாஷ் ராவ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

SCROLL FOR NEXT