சினிமா செய்திகள்

அதிதி ஷங்கரின் “இருவர்” இசை ஆல்பம் வெளியானது

நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள ‘இருவர்’ இசை ஆல்பத்தின் ‘கண்ணம்மா’ பாடலை, அவரோடு இணைந்து சூரஜ் சந்தோஷ் மற்றும் அதிதி சங்கர் பாடியுள்ளனர்.

நிவாஸ் கே பிரசன்னா , அதிதி ஷங்கர் இணைந்து நடித்த ‘கண்ணம்மா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது.

அதிதி சங்கர் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் இணைந்துள்ள புதிய இசை ஆல்பத்திற்கு ‘இருவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பர்ஸ்ட்லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

கதைக்களம்

இருவர் ஒரு பயணம் என்ற வாசகத்துடன் ஒரு அழகான காதல் இசைப் பயணமாக இது உருவாகியுள்ளது.இந்த ஆல்பத்தை 'ஜடா' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் குமரன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த பாடலை, அவரோடு இணைந்து சூரஜ் சந்தோஷ் மற்றும் அதிதி சங்கர் ஆகிய இருவர் பாடியுள்ளனர்.

இசை ஆல்பத்தின் ‘கண்ணம்மா’ பாடல்

இந்நிலையில், ‘இருவர்’ இசை ஆல்பத்தின் ‘கண்ணம்மா’ பாடல் வெளியாகியுள்ளது. குமரன் இயக்கிய இந்த ஆல்பத்தின் பாடல் வரிகளை நடிகர் விஜய் சேதுபதி எழுத நிவாஸ் இசையமைக்க அதிதி ஷங்கரும் சூரஜ் சந்தோஷும் இணைந்து பாடியுள்ளனர். இதன் மியூசிக் வீடியோவும் விரைவில் வெளியாகவுள்ளதால் தற்போது இதனை வெளியிட்டுள்ளனர்.

இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா நடிகராக அறிமுகமாகவுள்ளார். அதற்கான முன்னோட்டமாக இப்பாடலை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

SCROLL FOR NEXT