சினிமா செய்திகள்

ஏகனின் “ஹைக்கூ” படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவாகும் ‘ஹைக்கூ’ படத்தில் ஏகன், பெமினா ஜார்ஜ், ஸ்ரீதேவி அப்பல்லா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்

‘ஜோ’ திரைப்பட தயாரிப்பாளர்களின் மற்றுமொரு தரமான திரைப்படமான நடிகர் ஏகனின் ‘ஹைக்கூ’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்தப் படத்தில் ‘ஜோ’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படப் புகழ் ஏகன் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ‘மின்னல் முரளி’, ‘சேஷம் மைக்கேல் பாத்திமா’ படப் புகழ் பெமினா ஜார்ஜ் மற்றும் ‘கோர்ட்’ திரைப்படத்தில் நடித்த ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ‘ஜோ’ திரைப்படத்தை இயக்கிய ஹரி ஹரன்ராம் ‘ஹைக்கூ’ படத்திற்கு கூடுதல் திரைக்கதை எழுதுகிறார். யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார்.

நடிகர் ஏகன் நடிக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். திரையரங்குகளில் படம் வெளியாகும்வரை காத்திருக்காமல் அதற்கு முன்பே டிஜிட்டல் உரிமைகளை நெட்பிலிக்ஸ் வாங்கியிருப்பது கதை மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், ‘ஹைக்கூ’ படத்தின் படப்பிடிப்பு இன்று இடுக்கியில் பூஜை மற்றும் கிளாப்புடன் தொடங்கியது.‘பேரன்பு’, ‘தரமணி’ போன்ற பாராட்டப்பட்ட படங்களின் இயக்குநர் ராம் முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். படக் குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஆதார் கார்டு விவரங்களை நீங்களே லாக் செய்யலாம்: எப்படி தெரியுமா?

சீன ஆக்கிரமிப்பு குறித்து ராகுல் காந்தி பேச்சு: மக்களவையில் பாஜக எம்.பிக்கள் அமளி

நாடாளுமன்றத்தில் அமளி - பிற்பகல் 3 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணை

மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று அமெரிக்கா பயணம்