சினிமா செய்திகள்

'ஸ்ட்ரீ 2' படத்திற்குப் பிறகு...இந்த பாலிவுட் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா

பாலிவுட்டில் ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியான 'ஸ்ட்ரீ 2' படத்தில் 'ஆஜ் கி ராத்' பாடலுக்கு தமன்னா நடனமாடியிருந்தார்

மும்பை,

அஜய் தேவ்கன் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ரெய்டு. இதில் தேவ்கன் ஐஆர்எஸ் அதிகாரி அமய் பட்நாயக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ரெய்டு படத்தின் தொடர்ச்சியாக ரெய்டு 2 உருவாகியுள்ளது. இதில், அஜய் தேவ்கன், வாணி கபூர் மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கான படப்பிடிப்பில் தற்போது அவர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர் ' படத்தில் இடம்பெற்ற 'காவாலா' பாடலுக்கும், பாலிவுட்டில் ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியான 'ஸ்ட்ரீ 2' படத்தில் 'ஆஜ் கி ராத்' பாடலுக்கும் தமன்னா நடனமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.