தெலுங்கு சினிமாவில் கலக்கி வரும் நடிகை கீர்த்தி ஷெட்டி, கார்த்தி ஜோடியாக 'வா வாத்தியார்' படத்தில் நடித்து தமிழ் சினிமாவிலும் நுழைந்துள்ளார். தற்போது பிரதீப் ரங்கநாதனுடன் 'எல்.ஐ.கே.', ரவிமோகனுடன் 'ஜீனி' என அவரது படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
இதற்கிடையில் ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து கீர்த்தி ஷெட்டி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, "ஏ.ஐ. தொழில்நுட்பம் உண்மையிலேயே மிகப்பெரிய ஆபத்துதான். எது உண்மை, எது பொய் என்றே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சமூக வலைதளங்களை ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆக்கிரமித்திருக்கிறது. இது சினிமாவுக்கு பேராபத்து.
சமீபத்தில் கூட நான் ஒரு ஆணின் மீது கைபோட்டு நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. இதைப் பார்த்து 'அது யார்?' என்று என் அம்மா கேட்டார். அப்போது தான் அவருக்கு ஏ.ஐ. தொழில்நுட்பம் பற்றி விளக்கம் அளித்தேன். பிரபலங்களுக்கே இந்த கதி என்றால், சாதாரண பெண்கள் என்ன செய்வார்கள்? இந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தை எப்படி கட்டுப்படுத்துவது? என்பதே குழப்பமாக இருக்கிறது", என்றார்.