சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா லட்சுமியின் “சம்பராலா எடிகட்டு” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரோஹித் கே.பி. இயக்கும் ‘சம்பராலா எடிகட்டு’ படத்தில் சாய் துர்கா தேஜ், ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகின்றனர்.

சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா எடிகட்டு’ திரைப்படம் ஜனவரி 12, 2027 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சாய் துர்கா தேஜ் தற்போது ‘சம்பராலா எடிகட்டு’ என்ற பீரியட் ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். ஜெகபதி பாபு, சாய் குமார், ஸ்ரீகாந்த், அனன்யா நாகல்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரோஹித் கே.பி. இயக்கும் இப்படத்தை ‘ஹனுமான்’ புகழ் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். பி அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். சாய் துர்கா தேஜ்ன் தோற்றமும், படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமியின் தோற்றமும் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா எடிகட்டு’ திரைப்படம் ஜனவரி 12, 2027 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள ஒரு பான்-இந்தியா அதிரடி திரைப்படமாகும்.